உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாயிரத்தில் நகரும் பத்தாண்டு


அகல்கள் விழித்திருக்க அகிலம் மகிழ்ந்திருக்க
இகழின்றி இனிக்குமென இன்முகதோடு பூத்தது
இன்னுமொரு புத்தாயிரம் இருபத்தொன் றெனநல்
இனத்தினொடு இதழ்விரித்து எழுந்தது புத்தாண்டு
ஒன்றாய் இரண்டாய் ஒவ்வொன்றும் நகந்தது
ஒன்றாது இரண்டாய் உலகத்து இடரோடு
நகர்கிறது நரகவாழ் பத்தாண்டு இன்றோடு
நாறும் பிணங்கள் நீறாய் போகட்டும்
நரிகளின் அரசியல் நூறாகிப் போகட்டும்
நல்லோர் வாழ்வுக்காய் நகரட்டும் ஆண்டு
நல்லதொரு ஆண்டு பதினொன்று ஆம்நம்
மீழமக்கள் நலத்தைக் கொடுக்க

வியாழன், 30 டிசம்பர், 2010

நம் சுற்றுலாப் பயணம்.

ஓசுலோவிலிருந்து துரண்கெயிம் வரை, துரண்கெயிமிலிருந்து ஓசுலோ வரை(Oslo - Trondheim/ Trondheim - Oslo). நம் சுற்றுலாப் பயணம்.

நண்பகல் ஒரு மணியளவில் சிற்றூர்தியில் புறப்பட்டோம். மழை பெய்து கொண்டிருந்தது அதனால் வேகமாக ஓடாமல் அளவாகவே ஓடிக்கொண்டிருந்தோம். விண்ணூர்தி நிலைய தங்ககத்துக்கு அருகில் எரிபொருள் நிலையம் உள்ளது. அங்கே சற்று ஓய்வெடுத்துக் கொண்டோம்.அதன் பின்,
அங்கிருந்து கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் பயணித்து காமார்(Hamar) என்ற இடத்தை அடைந்தோம்.அங்கு பனிகால ஒலிம்பிக் நடந்த உள்ளரங்கம் உள்ளது.அங்கு ஒலிம்பிக் நடைபெற்ற ஆண்டு ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று நான்கு.நாம் அவ்விடத்தில் நின்று மீண்டும் ஓய்வெடுத்துக் கொண்டோம். அங்கே உணவரிந்தி விட்டு சின்னகாமாருக்குச் சென்றோம்.பல மணிநேரம் பயணித்து சின்னகாமாரை அடைந்தோம். அங்கே உள்ள பேரங்காடியில் சில பொருள்கள் வாங்கிக்கொண்டு குளிர்கூழும் உண்டுவிட்டு சிற்றூர்தியில் மீண்டும் பயணித்தோம்.சிலமணி நேர ஓட்டம் இருமருங்கிலும் காட்டுமரங்கள் ஆற்றின் ஓட்டம் அழகான இயற்கைக் காட்சி.சின்னகாமாருக்கு(Lille Hammar) அடுத்ததாய் ஒய்யர் (øyer) என்ற இடத்தில் கம்பளியாடுகள் மேய்ந்துகொண்டு நின்றன. அதன் அருகில் தற்கால தங்குமிடம் ( champing ). அங்கே பல இடங்களிலும் இருந்து நோர்வேநாட்டவர் வந்து தங்குவதுண்டு.அங்கு பேர்கன் என்ற இடத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரரை சந்தித்தோம். அவர்கள் மகிழ்வான நண்பர்கள். அவர்களோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.பின்,
நெடுஞ்சேய்மையாகப் பயணித்துப் பல மாநிலங்களினூடாக இறிங்கபூ(Ringebu) அடைந்தோம். அதற்கிடையில் மலைத்தொடரினூடாக அருவிகளையும் ஆற்றின் ஓட்டத்தையும் கண்டுகளித்தோம்.அடுத்து வின்சுதிறா( Vinstra), வின்சுதிறா (Vinstra) ஒரு அழகிய ஊர். அங்கும் பல சிறப்புகள் உண்டு. மலையடிவாரத்தில் அமைந்துள்ள அவ்விடம் பார்ப்பதற்கு மிகமிக மகிழ்வானது.நிற்க, (முன்பு ஒரு முறை தொடர் வண்டியில் துரோணியம் செல்லும் போது இடையே இங்கிருந்து வின்சுதிறா (Vinstra) சில தொலைவில் ஆறு பெருகிவிட்டது அதனால் தொடர்வண்டி செல்லாது என்று ஏந்துகளாக பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தனர். அது எமக்கு தெரியாது.அவ்வண்டி மீண்டும் ஓசுலோ திரும்பியது. அதையறிந்து ஓடிக்கொண்டிருந்த போதே வண்டியில் பயணரோடு பேசினோம் உடனே அடுத்த தரிப்பிடத்தில் இறக்கிவிட்டார்கள்.
மீண்டும் நிற்க,
அவர்களின் உதவியோடு மகிழுந்தில் துரோணியம் சென்றோம். அதற்காக கொடுத்த பணம் பதினேழாயிரம் குரோணர். அப்பணத்தைப் பயணமுகவர்களே பொறுப்பேற்றனர்.அதனால் அன்று இறங்கிய இவ்விடத்தை எம்மால் மறக்க முடியாது).வின்சுதிறா(Vinstra) தாண்டி ஒத்தா(Otta) ஊடாக சென்ருகொண்டிருந்தோம். ஒத்தாவில்(Otta) தங்குமிடங்கள் செய்திகொடுக்கும் பலகை அருகே ஓய்வெடுக்க ஏந்துகள் அமைக்கப்பட்டிடுந்தன.
சென்ற வாட்டி பன்றி இறைச்சியும் இறைச்சிக் கலவை உணவும் சுட்டுச் சாப்பிட்டோம்.
இம்முறை தொவ்றே(Dovre) எரிபொருள் அருகே இறைச்சி சுடுவதற்கு அமைக்கப்பட்ட இடத்தில் அமைதியாக சாப்பிட்டும் ஓய்வெடுத்தும் கொண்டோம் .

நேரம் என்னவாக இருக்கும் என்று பார்தால் இரவு பத்துமணி.ஒசுலோவிலிருந்து(Oslo) தொவ்றே(Dovre) சிற்றூர்தி ஓட்டம் ஏ6 வழியாக கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரம் கழிந்துள்ளன. தொவ்றேவிலிருந்து கிட்டத்தட ஒருமணிநேரம் பயணித்து உடொம்பசு(Dombås) என்னும் இடத்தை அடைந்தோம்.

அங்கே உணவகங்கள் எரிபொருள் நிலையங்கள் தங்குமிடங்கள் உல்லாச பயணிக்கான செய்திப் பலகையென அனைத்து ஏந்துகளும் உள்ளன. நாங்கள் அங்கு நின்று ஓய்வெடுப்பதுண்டு.உடொம்பொசில்(Dombås) இருந்து இருகிளையாக பிரிகிறது ஒன்று ஓளசுண்டு (Ålesund)மோள்டே(Molde)மோள்டேயில் நம் தமிழரும் வாழ்கின்றனர்.அங்கு தமிழ்ப் பள்ளியும் உண்டு. மற்றையது துரண்கெயிம்.

நாம் துரண்கெயிம் பயணித்தோம். உடொம்பசிலிருந்து(Dombås) ஏ6 தொவ்றே மலைத்தொடர்(Dovre fjell) ஊடாக நீண்டவழிச் சேய்மை பயணிக்க வேண்டும் . உச்சிமலை, மக்கள் இருப்பிடங்கள் இருக்காது. அடிக்கடி ஓய்வெடுக்க இடங்கள் உள்ளன.ஒரு நாள் செல்லும்போது கடுமிடி மின்னலோடு மழை பெய்து கொண்டிருந்தது.சிற்றூர்தி அடிக்கடி ஆடியது. காற்றை அளப்பதற்கு காற்று அறிகருவியும் ஓரிரு இடத்தில் பொருத்தியுள்ளனர். பகலில் பார்த்தால் நாங்கள் துறக்கத்தில் நிற்பதாக தோற்றும் அவ்வளவு அழகு. சித்தப்பயிற்சி செய்வதற்கு ஏற்ற இடம்.நீண்டவழி பயணித்து ஒப்தாலை(Oppdal)அடைந்தோம் .சிறிய ஊரெனினும் அழகாக நகரம் போல் இருந்தது ஓடும் போது கவனம் வேண்டும் குடியிருப்புகள் பல உள்ளன. அங்கே ஓடும் அளவு மணிக்கு ஐம்பது கிலோமீற்றர்(50km/h).அங்கு விண்ணூர்தி நிலையமும் உண்டு.அங்கிருந்து பயணித்து சோறன்(Støren) இடத்தை அடைந்தோம். பண்ணைகள் நிறைந்த இடம். தங்குமிடங்களும் உண்டு. ஓய்வெடுக்காமல் நேரே துரண்கெயிம் சென்றோம். துரண்கெயிம் இருப்பிடத்தை அடைந்த பொழுது மணி விடியற் காலை இரண்டுமணி.ஒசுலோவில் (Oslo) இருந்து துரண்கெயிம் (Trondheim) வரை பன்னிரண்டு மணிநேரம்.



மீண்டும் தொடரும்......

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே...

ஆய்தங்களால் உலகை வாங்க பற்பல நாடுகள் முயலுகின்றன. அன்பில் எதையும் பெற்றுவிட முடியும் என்பதையே இப்பாடல் உணர்த்துகிறது. கவிப்பேரசு வைரமுத்து அவர்கள் எத்தனையோ பாடல்களை எழுதினாலும் இப்பாடலூடாக பிறவிப்பயனை அடைகின்றார். உலகம் பிறவிப்பயனை அடைய வேண்டுமானால் எல்லோரும் அன்புக்காய் உழைக்க வேண்டும்.

சனி, 25 டிசம்பர், 2010

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே



இப்பாடலைக் கேட்டதுமே மீண்டும் புத்துயிர்ப்புப் பிறக்கிறது. இப்பாடலை எழுதிய பாடலாசிரியர் பா.விஜய். இப்பாடல் பாடநூலில் இடம் பெற்றமை கவிஞருக்குக் கிடைத்த வெற்றி. இலக்கை நோக்கிச் சென்று கொண்டே இருப்போம்; வெற்றி எமதாகும் என்றோ ஒருநாள்.........

புதன், 15 டிசம்பர், 2010

எருமைகளைப் பாருங்கள்!!!!!!

காட்டிலே வாழும் விலங்களின் கதையிது,
காட்டு எருமைகளை இலக்கு வைத்து அரிமாக்கள் காத்திருந்தன. ஆண், பெண், கன்று மூன்றும் மேய்ந்து கொண்டு வந்தன. அரிமாக்களின் அருகில் வந்ததும் அவற்றின் எண்ணமறிந்து மீண்டும் ஓட்டமெடுத்தன.கரிமாக்களில் ஆணையும் பெண்ணையும் இரு அரிமாக்கள் துரத்திச்செல்ல கன்றை ஒரு அரிமா துரத்திக்கொண்டு காற்றடம் போட்டு வீழ்த்தவும் கன்று கவிழ்ந்து புரண்டு குளத்துக்குள் வீழ்ந்தது.வீழ்ந்த கன்றை அரிமாக்கள் சூழ்ந்து கொண்டன. குளத்தில் இருந்து சாகடித்து வெளியே கொண்டு வர அரிமாக்கள் முயற்சித்த போழ்து; குளத்தில் இருந்த முதலையும் கன்றை இறைச்சிக்கு பதம் பார்த்தது. அரிமாக்கள் கன்றை வெளியே கொண்டு வரவும்; முதலை கன்றின் காலை கௌவிப்பிடித்து இழுத்தது, அரிமாக்கள் வெளியே கொண்டுவந்து கொல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த போழ்து கன்றும் போராடிக் கொண்டிருந்தது. துரத்துப் பட்டு ஓடிய கரிமாக்கள் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு கன்றை மீட்கும் போரில் இறங்கின.அவை அஞ்சினாலும் கன்றின் கதறல் கேட்டு கரிமாக்கள் ஓர்மம் கொண்டு போராடத் தொடங்கின.
கரிமாக்களில் ஒன்று (தாயக இருக்கக் கூடும்)அரிமாக்களை தனது கொம்புகளால் தூக்கி எறிந்தது. அரிமா ஒன்று தூக்கியெறியப்பட்டது. கூட்டமாக இருந்த அரிமாக்களை தமது வலகரத்தால் பிரித்து போரிட்டன. அதில் அவை வெற்றிகண்டன. ஒவ்வொன்றாக அரிமாக்கள் துரத்தியடிக்கப் பட்டன. போராடிக்கொண்டிருந்த கன்றை விடுவிக்கும் வரை கரிமாக்களும் போராடின. இறுதியில் கன்றும் மீட்கப்பட்டது. அரிமாக்கள் மீண்டும் வந்து தாக்காதபடி எல்லைக் காவலாக எருமைகள் செயற்பட்டன.

1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழீழத்தை விடுவித்து தன்னிறைவான நிலமாக ஆக்கவேண்டுமென்று தந்தை செல்வா காலம் தொடங்கி பற்பல போராட்டங்களின் பின் கரிகாலன் மகன் காலமாகிய 2009 வரை அறுபது ஆண்டுகால போராட்டத்தில் பற்பல இடையூறுகளை தமிழினம் கண்டுள்ளது. சிங்களவரோடு போராடிய எம்மை முதலை போன்று இந்தியாவும் விழுங்க முயற்சித்த போழ்து, தேசியத் தலைவர் மே.தகு. வே.பிரபாகரன் முனைப்புடன் பிடிகொடுக்காமல் போராடினார். முள்ளிவாய்காலில் தமிழ்மக்களின் அழிவுக்கு படைமுன்னெடுப்புகளை இந்தியா எடுக்க அதனோடு பத்தொன்பது நாடுகள் ஊக்கம் கொடுத்தன. அவ்வவலத்தைப் புரிந்து கொண்ட தேசியத் தலைவர் புலம் பெயர் மக்களுக்கு 2008 ஆம் ஆண்டு தெளிவான கொள்கையுரையை வழங்கினார்.அதை புரிந்து கொண்ட புலம்பெயர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் ஐ.நா வல்லரசுகளின் கைபொம்மையாக இயங்கியதால் கைகட்டி வேடிக்கைபார்த்து.
கரிமாக்களின் கன்று போல் மீளவேண்டிய தமிழீழம் ஓலத்தோடு விடிகிறது...............