உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 28 ஜனவரி, 2012

கிட்டண்ணன்


பட்டுப் போலும் மேனி
முத்துப் போலும் சிரிப்பு
கனல் போலும் விழிகள் - அவற்றை
கவனமாய்ப் பேணும் கண்ணாடி
கிட்டண்ணனுக்கு இவை மட்டுமா?
சிறப்பு இல்லை இல்லை
பட்டறிவைப் பாடமாக்கும் நேர்த்தி
பார்த்தவற்றைப் படமாக்கும் கீர்த்தி
சட்டென்று முடிவெடுக்கும் கூர்மதி - அது
சண்டாளரைக் குறிபார்க்கும் செய்மதி
பட்டென்று சினம் வருமவருக்கு
பளார்பளார் ஏச்சுவிழும் பலருக்கு
கூட்டாளியாக இருந்தாலும் - புதுப்
போராளியாக இருந்தாலும்
புலிவீரர் தவறு செய்தால்
பொறுத்துக் கொளார்
களத்திலே நிற்போனுக்கு
குளப்படி தேவையில்லை என்பாரத்
தளபதியின் நோக்கும் செயலும்
தளராத நெஞ்சுந்தான் தேவை நமக்கும்

அரச கோட்டைக்குள் தினேசைத் தூதனுப்பி
கொடியவரின் நெஞ்சையும் குளிரச்செய்து
கைதிகளின் பரிமாற்றம் செய்யும்போது
காலில் விழுந்து கும்பிட்டார்
புத்தர் குடும்பத்தார்
அதுதான் தமிழீழம்
அது தான் புலிவீரம்
அது தான் தமிழர் வீரம்
விடுதலையின் வாயிலைத் திறந்து வைத்து
விடலைகள் எம்மைக் கவலையின்றிச்
சுதந்திரமாய்ப் பேணிய கிட்டண்ணன்
படிக்காமல் திரிகின்ற
மாணவரைக் கூப்பிட்டழைத்துக்
குட்டுவிழும்,
பெண்களைக் கேலிசெய்தால்
பொறுப்பின்றி நடந்தால்
எரிச்சலோடு எச்சரிப்பும்
பெண்களுக்கு மதிப்பளித்த
முதலியக்கம் அல்லவா!
அவர்க்கு வீரத்தைப்
பயிற்றிய வீரனும் அல்லவா? - அவர்

மேடையில் ஏறிப் பேசும்போழ்து
மேதைகள் தோற்றுப் போவார்
மேலை நாட்டவரின் கேள்விஒன்று
எது தமிழீழம் என்றபோது
சிங்களன் குண்டுகள்
எங்களெல்லாம் வீழ்ந்ததோ
அங்கலெல்லாம் தமிழர் குடிநிலம்
அதுவேயெம் தன்னேரில்லாத் தமிழீழம்
பொங்கும் தமிழரின் பிள்ளையவன் - அச்
சங்கத் தமிழ்மகனை எவரும்
வாயால் வெல்லவும் முடியுமோ?!
அவன் தான் கிட்டண்ணன் - அவனின்

கால் ஒன்றை ஒடித்தபோது
கண்ணீர் சிந்தி அழுதது
காலுக்காக இல்லையடா தம்பி அவன்தன்
காலுக்கு இல்லையடா......., - ஒற்றைக் காலோடும்
வேலன் மகன் ஆணைப்படி
வெளிநாடும் வந்து போனார்
புலம்பெயர்ந்து வந்தவருள்
பொறுப்புணர்வைக் கொடுப்பதற்கே....அப்போழ்து
சலையில் நின்றாலும்
வெள்ளையர் மனம்நோக
நில்லாதீர் என்பார்
அப்படிப் பக்குவம் அவர்தான் கிட்டண்ணன்

முள்ளிக்கரை வாய்க்காலில்
பிஞ்சுகளை கிழித்தபோது
முரட்டு எதிரிக் கைதிகளைப்பேணி
வெண்கொடி முன்னே கையளித்த
மேதகு தலைவன் இயக்கத்தை
பேதைகள் போலும் பேசாதீர் மக்காள்
போர்நெறிக்கு இழுக்காகா
உண்மையொன்றைத் தெளிந்து,
பொறு பொறுதிரு, பொறு பொறுத்திரு

களத்தில் நின்றபடி
கரும்புலிகள் நெறிப்படி
எல்லைகள் தாண்டியும்
தீயை மூட்டி நீறாக்கியிருக்கலாம்
எல்லை பகுப்புக்குள்
இருபதினாயிரத்து முந்நூற் றெண்பது
சதுரக்கல்லுக்குள் தான்
போராட வேண்டும், நாம் போராட வேண்டும்
கிட்டண்ணன் படையணியும் தான்
அப்பணியில் நடைபோடும்.................!
ஈற்றிலே ஒன்றுரைப்பேன் உனக்கு
கிட்டண்ணன் வரலாற்றை
படி தம்பி உன்
புத்திக்கும் கூர்மை வரும்
களத்தில், தரிசனம், நிதர்சனம், ஒளிவீச்சு போல்
உள்ளத்தில் வெளிச்சம் வரும்
வங்கத்தில் தம்மை எரியூட்டி
இந்திய சூழ்ச்சியை
எங்களுக்கு உரைக்காமல் உரைத்த
கிட்டண்ணனன் வழிக்கு உரமிடு
வா! வந்து இனத்துக்காய் வாதிடு
தா! உன் தைரியத்தில்
ஒளி பாச்சு
இருள் மங்கி ஒளியாகும்
கிட்டண்ணன் சொல் பலிக்கும்! நிச்சம்!