உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

ஞாயிறு, 25 மே, 2014

பிரபாகரம்



அறவழிப் போராட்டம்

நசுக்கப்பட்டது

கவிஞன் தாக்கப்பட்டான்

அரசியலாளன்

தூக்கியெறியப்பட்டான்

அவலங்களின்

கொதிப்பு

கத்திமுனையில்
தீர்ப்போமென

கங்கணம்

கட்டி நின்றது

சிறிலங்காவின்

அரச பயங்கர வாத

இயந்திரம்

ஆயுத தாரிகளின்

கொட்டத்தில்

அரச படைகளின்

அகோரப்

பிடியில் தமிழ்த்தேசியம்

சிவகுமாரன்

இன்பம்

போன்ற இளையவர்

மாணவர் இயக்கத்தினர்

தோற்றுவித்தனர்

புதிய வடிவத்தை

சிறைபிடிக்கப்பட்டான்

காணாமல் போனான்

இன்னபம்

நஞ்சையுண்டான்

நம் சிவகுமாரன்

கண்ணீரோடு

அலைந்தாள்

தமிழ்த்தாய்

தம்பியர் எழுந்தார்

அதனுள்

ஒரு தீப்பொறி

தம்பீஇ! தம்பீஇ!

தம்பி

தீவிரப்

போர்க்கோலமாய்

தம்பிமார் கூடினர்

புதிய புலிகளாய்

கூடவே புயல்களும்

சுதந்திரப் பறவைகளாய்

குப்பியும் மாலையுமாய்

கிட்டுவும் குட்டிசிறியும்

சீலனும் விக்டரும்

சந்தோசமும் பொன்னமானும்

என ஆளுமையின்

வடிவங்கள்

ஒரு சேற இயங்கிய

தமிழியக்கத்தின்

புதியதொரு தொடக்கம்

புமையின் உருவாக்கம்

வீரத்தின் வரலாறு

வரிப்புலிகளாகவும்

வான்புலிகளாய்

மண்ணிலிருந்து விண்வரை

தாழ்த்தப்பட்ட தேசியங்களுக்கும்

முன்னெடுத்துக்காட்டு

பிரபாகரன்

ஒரு காலப்பெயர்

உறுதியின் உறைவிடம்!

கருப்பை Black Bag


வட்டி

வரிகட்டாத

தொழிலாளர்

நேரத்தைச்

சுருக்கி

தேகத்தைச்

சுரண்டி

இரத்தத்தைப்

பிழிந்து

சேர்த்த பணம்

தனி வீட்டுப்

பெட்டக

வயிற்றினுள்

பண்ணைச் சீவியம்!


வேட்டைக்காரன்

சாந்தம் அண்ணன்

வடிஎண்ணெய் ஊர்தி

மந்தை ஆடுகள்

மடிமுட்டிக் குடிக்கும்

குட்டிகள்

கறவை மாடுகள்

கன்றுகள்

குஞ்சுகளைக் காக்க

கொத்த வரும்

குருகுகள்

வெள்ளைச் சேவல்கள்

வெகுண்டோடும்

பேடுகள்

கடாயுயர

கடுவன் நாள்

அழுக்கு வாளிகள்

மழைத் தூறல்கள்

கதிரையின் கனைப்பு

கூவும் சத்தம்

உணவு மணியொலிப்பு

காஞ்சோண்டி

பருப்பு

கூழ்

அப்பா! அப்பப்பா!

விறகுச்சூட்டு வெக்கை

சுடச்சுட உறிஞ்சிக்

குடிக்கும் சிலநிமையம்

ஓய்வு நேரம்

நிழற்படம்

மீண்டும் திட்டம்

வேலை நேரம்

வீட்டுத் தோட்டம்

நெசவுக் கூடம்

கைவினை மண்டபம்

காந்தியின்

மண்டேலாவின்

படங்கள்

சிசிலின்

ஆளுமையை

விளக்கியபடி

விடைபெற்ற மட்ட

தோட்டப் பயிர்களை

நாட்டும் பொழுது

நகர்ந்தது

நாழி

அதுவொரு

பண்ணைச்

சீவியம்!

மே 18


மே 18

மாந்த நேயம்

மன்பதை என

வாயடிக்கும்

நோர்வேயும்

கைவிட்ட நாள்

நோபலுக்கும்

ஆபிரகாம்

லிங்கனுக்கும்

காந்திக்கும்

ஏன்

புத்தனுக்கும்

வல்லரசுகளால்

கரிபூசிய

நாள்

மருத்துவமனை

மரத்தடியில்

நோயாளிப்பெண்கள்

பாலியலில்

வன்புண்ரப்பட்ட

பேயாடி

ஆட

ஒரு தேசியம்

தன்னுரிமைக்காய்

நாடமைக்க

அத்தனையும்

இழந்து

ஏதிலிகளாய்

சிவந்துபோன

முல்லைக்கலருகே

மூச்சிறுக்கிய நாள்

செவ்வாய், 18 மார்ச், 2014

வைத்திலிங்கம் சுந்தரலிங்கம்

Lankasri Notice!

என்னம்மைக்கு மூத்தவனே

எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவனே

உன்மனைவி பிள்ளைகளை

ஏன்பிரிந்து சென்றனையோ!

வைத்திலிங்கம் யோகம்மாவின்

வயிற்றிலுதித்த வைரமே!

வான்படை வீரனாயும்

ஞானம்ஸ் நிருவாகியாயும்

சனசமூக செயற்பாட்டாளராயும்

தினமியங்கிய பொறுப்பாளனே!

நான்பார்க்கும் போதெல்லாம்

தாளிகையும் கையுமாய்

நிழல்பிடிப்பதில் படப்பிடிப்பாளராய்

வாய்நிறைய ஆங்கிலதோடு

வலம்வந்தாய் தாய்மாமனே!

தங்கைக்குச் சீர்கொடுத்து

தங்கத்தை அனுப்பிவைத்து

அவளீன்ற மகனைநீ

ஆராட்டி ஓராட்டி

பாராட்டி வளர்த்ததனால்

தமிழ்திரட்டில் உனைவைத்தேன்

வாழ்க நின் புகழே!