உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

ஞாயிறு, 21 நவம்பர், 2010

நடுகல் வழிபாடு

பூக்களைக் கோர்த்து வைக்கும்
கார்த்திகை மாதம்
பாக்களைச் சாற்றி வைக்கும்
கார்த்திகை மாதம்
சுட்டிகள் நிரைவகுக் கும்மே
கார்த்திகை மாதம்
சொந்தங்கள் கூடும் திங்கள்
கார்த்திகை மாதம்

நடுகல் வழிபாடு
நடக்கும் காலம்
நெஞ்சிலே சூளுரைக்கும்
நேரிய காலம்
நாயகன் கொள்கையினை
உரைக்கும் காலம்
நம்வீரர் மாதவங்கள்
உணர்த்தும் காலம்

உத்தம மறவர்தாம்
உதிர்ந்த போதும்
உயிரினை உதிரத்தை
ஊற்றினார் பாரும்
எத்தனை இடர்வரினும்
எமக்காக நின்று
எத்துணை புரிந்தார்கள்
எம்நிலம் வென்று

எந்நன்றி கொன்றார்க்கும்
உய்வுண்டாம் தமிழா
செந்நன்றி மறந்தேதான்
வாழ்வது முறையா
சந்தன மேனியர்தம்
கல்லறை சென்று
சிரம்தாழ்த்தி வணங்குவோமே
சீரோடு நின்று

கார்முகில் அகன்றோடும்
கங்குலும் விலகும்
பாருங்கள் ஒருநாள்நம்
பைந்தமிழ் ஒலிக்கும்
ஒலிக்கின்ற காற்றோடு
ஓசையாய் கலந்து
தமிழீழம் நிறைப்பார்கள்
தமிழோடு வாழ்ந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக