உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

திங்கள், 29 நவம்பர், 2010

மன்பதை கொண்ட தேசியவிலங்கு

ஆபிக்க காட்டிலே
அடர்ந்த மரங்கள் உள்ளன
அகவும் அலறும் பறவைகள்
அந்தக் காட்டில் உள்ளன
கொடு விலங்குக் கூட்டங்கள்
கொத்தித் தின்னும் கழுகுகள்
கொண்ட அடவி தன்னிலே

புள்ளிச் சிறுத்தைப் புலியது
எங்குமலைந்து திரிந்தது
வயிற்றுப் பசியைப் போக்கவே
அங்குமிங்கும் பார்த்தது
அங்கே குரங்கைக் கண்டது
அதனை வேட்டையாடவே
அணியமாகிக் கொண்டது

அக்குரங்கின் மடியில்பால்
அணைத்தபடி குருளையும்
அருந்திக் கொண்டு இருந்தது
அதனைக் காணா புலியதும்
வேட்டையிலே இறங்கிற்று
வேகமாக தாயதை
விழுத்திக் கொன்று விட்டது
கொன்ற அந்தக் குரங்கினை
கொண்டு சென்று மரத்திலே
தின்ன எண்ணிக் கொண்டது

ஒட்டிக் கொண்டு தாயதன்
உடம்பினோடு கிடந்தது
இடறுபட்டு வீழ்ததும்
குரலை எழுப்பிக் கிடந்தது
இரண்டொருநாள் பிறந்ததால்
ஏதும் செய்ய முடியலே

குரலைக் கேட்ட புலியது
குணத்தை மாற்றிக் கொண்டது
அன்புகொண்டு தாயைப்போல்
அரவணைக்க தொடங்கிற்று
அருகில் இருந்து பரிவுடன்
குருளை தன்னைக் காத்தது

காட்டு நாய்கள் வந்தன
கொடிய கூச்சல் போட்டன
உறுமிச் சிறுத்தை சீறவே
ஓட்டம் பிடித்தகன்றன
தாயை இழந்த குருளைக்கு
தானே தாயுமாயிற்று
நாவால் நக்கி குட்டிபோல்
நன்றாய் வளர்க்க எண்ணிற்று

என்ன சொல்வேன் தோழர்காள்
எண்ணமெல்லாம் குருளைக்காய்
ஏங்கித் துடித்ததென் மனம்
வேண்டுமென்றே மதத்துக்காய்
மாந்தயினத்து குழந்தையை

அழிக்கும் அரசை என்சொல்வேன்?
அழிக்கும் அரசை என்சொல்வேன்?


குறிப்பு: இது கற்பனையல்ல காட்சி
_ச.உதயன்_

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக