உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

புதன், 15 டிசம்பர், 2010

எருமைகளைப் பாருங்கள்!!!!!!

காட்டிலே வாழும் விலங்களின் கதையிது,
காட்டு எருமைகளை இலக்கு வைத்து அரிமாக்கள் காத்திருந்தன. ஆண், பெண், கன்று மூன்றும் மேய்ந்து கொண்டு வந்தன. அரிமாக்களின் அருகில் வந்ததும் அவற்றின் எண்ணமறிந்து மீண்டும் ஓட்டமெடுத்தன.கரிமாக்களில் ஆணையும் பெண்ணையும் இரு அரிமாக்கள் துரத்திச்செல்ல கன்றை ஒரு அரிமா துரத்திக்கொண்டு காற்றடம் போட்டு வீழ்த்தவும் கன்று கவிழ்ந்து புரண்டு குளத்துக்குள் வீழ்ந்தது.வீழ்ந்த கன்றை அரிமாக்கள் சூழ்ந்து கொண்டன. குளத்தில் இருந்து சாகடித்து வெளியே கொண்டு வர அரிமாக்கள் முயற்சித்த போழ்து; குளத்தில் இருந்த முதலையும் கன்றை இறைச்சிக்கு பதம் பார்த்தது. அரிமாக்கள் கன்றை வெளியே கொண்டு வரவும்; முதலை கன்றின் காலை கௌவிப்பிடித்து இழுத்தது, அரிமாக்கள் வெளியே கொண்டுவந்து கொல்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த போழ்து கன்றும் போராடிக் கொண்டிருந்தது. துரத்துப் பட்டு ஓடிய கரிமாக்கள் கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு கன்றை மீட்கும் போரில் இறங்கின.அவை அஞ்சினாலும் கன்றின் கதறல் கேட்டு கரிமாக்கள் ஓர்மம் கொண்டு போராடத் தொடங்கின.
கரிமாக்களில் ஒன்று (தாயக இருக்கக் கூடும்)அரிமாக்களை தனது கொம்புகளால் தூக்கி எறிந்தது. அரிமா ஒன்று தூக்கியெறியப்பட்டது. கூட்டமாக இருந்த அரிமாக்களை தமது வலகரத்தால் பிரித்து போரிட்டன. அதில் அவை வெற்றிகண்டன. ஒவ்வொன்றாக அரிமாக்கள் துரத்தியடிக்கப் பட்டன. போராடிக்கொண்டிருந்த கன்றை விடுவிக்கும் வரை கரிமாக்களும் போராடின. இறுதியில் கன்றும் மீட்கப்பட்டது. அரிமாக்கள் மீண்டும் வந்து தாக்காதபடி எல்லைக் காவலாக எருமைகள் செயற்பட்டன.

1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழீழத்தை விடுவித்து தன்னிறைவான நிலமாக ஆக்கவேண்டுமென்று தந்தை செல்வா காலம் தொடங்கி பற்பல போராட்டங்களின் பின் கரிகாலன் மகன் காலமாகிய 2009 வரை அறுபது ஆண்டுகால போராட்டத்தில் பற்பல இடையூறுகளை தமிழினம் கண்டுள்ளது. சிங்களவரோடு போராடிய எம்மை முதலை போன்று இந்தியாவும் விழுங்க முயற்சித்த போழ்து, தேசியத் தலைவர் மே.தகு. வே.பிரபாகரன் முனைப்புடன் பிடிகொடுக்காமல் போராடினார். முள்ளிவாய்காலில் தமிழ்மக்களின் அழிவுக்கு படைமுன்னெடுப்புகளை இந்தியா எடுக்க அதனோடு பத்தொன்பது நாடுகள் ஊக்கம் கொடுத்தன. அவ்வவலத்தைப் புரிந்து கொண்ட தேசியத் தலைவர் புலம் பெயர் மக்களுக்கு 2008 ஆம் ஆண்டு தெளிவான கொள்கையுரையை வழங்கினார்.அதை புரிந்து கொண்ட புலம்பெயர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் ஐ.நா வல்லரசுகளின் கைபொம்மையாக இயங்கியதால் கைகட்டி வேடிக்கைபார்த்து.
கரிமாக்களின் கன்று போல் மீளவேண்டிய தமிழீழம் ஓலத்தோடு விடிகிறது...............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக