உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

சனி, 11 செப்டம்பர், 2010

அரியாலை ஊர்

கால் மிதித்து நண்டு பிடிக்கும் கடல்
காய்ச்சுக் கொட்டும் தென்னைகள்
ஈச்சஞ்செடிக் குலைகள்
இருந்து எலி பிடிக்கும் பச்சைப் பாம்பு

நீண்டுயுர்ந்த பனைகள்
நிறை மாதக் கதிர்கள்
நாசு தொடும் நாவலடிக் காற்று

அழகுக்கோன் வண்டில் மாடுகள்
அளந்து திரிந்த சாலை
கொள்ளியிட கோடியில்
சித்துப்பாத்திச் சுடலை

வாருங்கள் என்று வளைந்து
வரவேற்கும் யாழ் வரவு - கண்டு
ஊருக்குள் நுளைந்தால்

வீடுகள் விழிக்கட்டும்
வெளிக்கிடடி விசுவமடு
அரச நாடகங்கள்
அத்தனையும் மனதில் ஓடும்

ஆத்திக்காடு
அல்லியும் தாமரையும்
அழகாய் பூக்கும் நெடுங்குளம்
ஆங்கொரு கோயில்

ஆண்டுக்காண்டு
வண்டில் மாட்டுச்சவாரி
போட்டி நடத்தும் பெருந்திடல்
சிங்களப் படையை புலி
வேட்டையாடிய நெடுஞ்சாலை

வானெட்டும் கோபுரம்
வேறி குதித்து விளையாடும்
தேர் மூட்டி
ஏடு தொடக்கிய பள்ளி

தாண்டினால் தபால்கடைச் சந்தி
தளபதி விக்டர் நினைக்கற் சிலை
மாவீர் புகழுரைக்கும் சந்தைச் சுவர்
சந்தைக்குள் நேச மணிக்குரல்

வலது கை புறத்தே
பெருநன் சந்தோசம் வீடு
பேச்சியம்மன் கோயில்

இடது கை புறத்தே
ஆனந்தம் வடலி
கிட்டண்ணன் பாசறைகள்

கலையூட்டிய கலையரங்கம்
வாசித்துப் பழகிய வாசகசாலை
கராத்தே பயிற்சி கொடுத்த
மூன்றாம் மாடி
என்னூருக்கு எஃபெயில்

மாம்பழஞ் சந்தி
மாவீர்ன் மதி
திருவுருவச் சித்திரம்

வலது கை புறத்தே
நாயன்மார் கட்டு
இடது கைபுறத்தே
இலந்தைக் குளம்

கிட்டியடித்த நெசவுசாலை
மீன் பிடித்த பிரப்பங்குளம்
கோச்சி விட்ட மணல்
அம்மை போலிருந்த முத்துமாரி
அம்மன் கோயில்

நீச்சலடித்த பெருமாள் தோட்ட
நன்னீர்க்கேணி
கார்த்திக் மரித்த மதவு
புகை வண்டி ஓய்வெடுக்கும்
புங்கன்குளம்

காற்பந்து விளையாடிய
காசிப்பிள்ளையரங்கப் புல்வெளி
கற்றுக் கொடுத்த கல்வி நிலையம்
என்னையும் தமிழையும்
இயக்கிய
கனகரட்னம் மத்திய மகா வித்தியாலயம்

என
நாற்புற நடுவில்
அரிய கலை யூரெனும்
அரியாலையாம் என் ஊர்.

_ச.உதயன்(அரசன். தமிழரசன்)

1 கருத்து:

  1. தெள்ளுத் தமிழ் சொல்லடுக்கி,
    தெளிவான ‘கரு’த்தொடுத்து
    வெள்ளமென வார்த்தைகளை
    ’வெடுக்’கென்று ஓட்டுகின்றீர்!

    ‘அரியாலை’எனும் ஊரை
    அருகிருந்து பார்த்ததுபோல்
    தெரியாமற் தெரிந்துள்ளம்
    திகைப்புணர்வு கொள்கின்றதே!

    பதிலளிநீக்கு