உதயன்.சத்தியானந்தன்

"குடும்பம் குமுகம் இரண்டும் என்னிரு கண்கள்" _ச.உதயன்.

புதன், 22 செப்டம்பர், 2010

புதிய பாதை

தமிழ்மொழி காப்போம்
வாரீர் - தூய‌
தமிழாலே செய்யுள்கள்
யாப்போம் வாரீர்
தமிழ்க்குடி காப்போம்
வாரீர் - ஏழை
தள்ளாடும் போதிலே
தாங்குவோம் வாரீர்
குழந்தைக்கும் மரபினைச்
சொல்லி - நல்ல‌
குமுகத்தை ஆக்குவோம்
தோழர்காள் வாரீர்

மறைமலை சொன்னது
போலே - மேன்மை
மறைகளைக் கற்றுநீம்
மொழியாக்க வாரீர்
ஐரோப்பா முன்றலில்
நின்று - (அப்துல்கலாம்)
ஐயனின் நாவைப்போல்
நவிலுவோம் வாரீர்
உலகெல்லாம் திரிவோமே
வாரீர் - வெகுவாய்
ஊர்களை உருவாக்க‌
ஒன்றாவோம் வாரீர்

வள்ளுவர் ஔவையைப்
போலே - சந்தப்
பள்ளுவால் பாவாக்க‌
தம்பியர் வாரீர்
பேதமை கொள்ளவும்
வேண்டா - கொலைப்
பேய்களைப் போலே
ஆகவும் வேண்டா
ஆய்தப் போர்களும்
வேண்டா - அன்பாய்
ஆய்வுகள் செய்து
அறங்காக்க வாரீர்.
_ச.உதயன்

2 கருத்துகள்:

  1. அறநெறி சொல்லும் எளிய கவிதைகள்
    அழகுத் தமிழில் சொல்வோர்கள்
    அறிவை,மனதை,தெளிந்த நோக்கை
    அனைவரும் வாழ்த்தி மகிழ்வோமே!

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஐயா. நெகிழ்ந்து போனேன் நிங்கள் வரிகண்டு.

    பதிலளிநீக்கு